வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்க நடவடிக்கை: மனைவி கோரிக்கை

வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்க நடவடிக்கை: மனைவி கோரிக்கை
X
வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துளாளர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி மாரியம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எனக்கு 15 வயதுள்ள ஆண் குழந்தை உள்ளது. எனது கணவர் மாணிக்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி சென்னையை சேர்ந்த சேகர் என்பவரும் கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சப் ஏஜென்ட் பால்துரை என்பவர் மூலம் துபாய் நாட்டில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றனர். அந்த கம்பெனியில் 10 நாட்கள் மட்டுமே வேலை செய்தார்கள் பின்பு கம்பெனியிலிருந்து வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. அந்த நாட்டு உரிமை இல்லாமல் சென்றுவிட்டதால் அவர்கள் வேலைக்கு சென்ற கம்பெனியில் உடன் பணி செய்த பஞ்சாபை சேர்ந்த நபர்கள் வெளியில் வெள்ளை கார்டு வாங்கி தருவதாகவும் நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாகவும் பொய் சொல்லி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில், கணவருடன் சென்ற 5 நபர்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் என் கணவர் மட்டும் துபாய் நாட்டில் சிறையில் சிக்கி தவித்து வருகிறார். அவரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story