ஆணவக் கொலையை கண்டித்து பாஜக தவெக அதிமுக கட்சிக்காரர்கள் திமுகவை எதிர்த்து ஏன் போராடவில்லை

தமிழக அரசு உடனடியாக ஆணவக் கொலைகள் தடுக்க சிறப்பு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்
தமிழகத்தில் சாதிமறுப்பு திருமணத்தை கொண்டுவந்த அண்ணா, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்கிய கலைஞர் ஆகியோருக்கு உள்ள துணிச்சலைபோல் மற்ற சாதியினர்கள் எதிர்ப்பார்கள் என்ற எண்ணம் இல்லாமல் ஆணவ கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டத்தை ஸ்டாலின் கொண்டுவர வேண்டும். நாங்கள் எல்லாம் இந்துக்கள் என சொல்லும் பாஜக,புதிதாக கட்சி தொடங்கிய விஜய்,அதிமுக எடப்பாடி ஆகியோர் நடைபெற்றுவரும் ஆணவ கொலைகளுக்கு எதிராக திமுகவை எதிர்த்து கண்டனம் தெரிவிக்காதது ஏன்?, பெரம்பலூரில் நடைபெற்ற ஆணவ கொலைகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு. அரியலூர் - பெரம்பலூர் ஆகிய இருமாவட்டத்தில் சார்பில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆணவ கொலைகளை தடுப்பு சிறப்பு சட்டம் இயற்ற மத்திய மாநில அரசை வலியுறுத்தி நடைபெற்ற மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இருமாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் ஆணவ படுகொலை என்பது வெறும் மாநில பிரச்சனையல்ல அது தேசிய பிரச்சனை இதைதடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்றிட மாநில மற்றும் மத்திய அரசுகளை தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், தற்போது மேலும் ஒரு ஆணவ கொலை நடந்துள்ளதாகவும் ஆணவகொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை (CID) மேற்கொள்ள வேண்டும். ஆணவபடுகொலைக்களுக்கு எதிராக நாற்பது ஆண்டுகளாக போராடும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. யாரும் புதிதாக கட்சி தொடங்கலாம் குறிப்பாக நடிகர் விஜய் இந்த ஆணவக்கொலை தொடர்பாக கண்டிக்கக்கூட முடியவில்லை., அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி இந்த பிரச்சனை தொடர்பாக கண்டனம் எழுப்பவில்லை. ஆணவக்கொலை பிரட்சனையில் விசிகவை தவிர எந்த கட்சியும் எதிர்கவில்லை. அதிமுக திமுக அரசை எதிர்த்து இந்த பிரச்சனை கையில் எடுக்காதது ஏன்., ஒடுக்கப்பட்டவர்கள் வாக்கு வேண்டும் ஆனால் அவர்களுக்கு பரிந்துபேச தேவையில்லை என்ற இறுமாப்பில் அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். பாஜக ஆர்.எஸ்.எஸ். தோன்றுவதற்கு முன்பாகவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த மண்ணில் ஆணவக்கொலைகள் இருந்துள்ளது. நாமெல்லாம் இந்துக்கள் என்று சொல்லும் பாஜக கவின் கொலையை கண்டிக்காது ஏன்? எல்லோரும் தலித் ஓட்டு வேண்டும் ஆனால் அவர்களுக்கான பிரச்சனைக்கு குரல்கொடுக்காமல் இருந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், இந்த ஆர்ப்பாட்டத்தை திமுகவில் அதிக இடம் கேட்க வேண்டும் என்னும் நோக்கில் நடத்தவில்லை மாறாக சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டுள்ள தமிழக அரசிடம் வலியுறுத்தும் விதமாக நடத்திவருகிறது விசிக. அனைத்து சாதியினரும் எதிர்ப்பார்களோ என்று எண்ணாமல் அண்ணா கொண்டுவந்த சாதிமறுப்பு திருமணத்தை சட்டமாக்கியதைப்போல்,அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக்க சட்டம் இயற்றிய கலைஞரை போல், ஆணவக்கொலைகளுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலில் மற்ற சாதியினர் எதிர்பார்கள் என்று எண்ணாமல் அதை துணிச்சலோடு கொண்டுவர வேண்டும் பேசினார்.
Next Story