வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்

வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்
X
வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீடு வேண்டி மனு அளித்ததன் பேரில், அவரின் கோரிக்கையை ஒரே நாளில் பரிசீலனை செய்து, மாற்றுத்திறனாளிக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று வழங்கி, வீடு கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது. தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-2025 ஆம் ஆண்டில் 11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 357 வீடுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 243 வீடுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 276 வீடுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 124 வீடுகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 321 வீடுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 214 வீடுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 189 வீடுகளும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 164 வீடுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 47 வீடுகளும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 96 வீடுகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 200 வீடுகளும் என மொத்தம் 2231 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கடந்த 09.08.2025 அன்று நடைபெற்ற பல்நோக்கு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, முகாமிற்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகை தந்த அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை ஊராட்சி சேர்ந்த நாகவிஜயா என்ற மாற்றுத்திறனாளி வீடு வேண்டி மனு அளித்ததன் பேரில், அவரின் கோரிக்கையை ஒரே நாளில் பரிசீலனை செய்து, அவருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று வழங்கி, வீடு கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு சென்ற போது, மாற்றுத்திறனாளியின் குறைகளை கேட்டறிந்து, அவருக்காக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை பெற்று, அரசின் இரு வேறு திட்டங்கள் மூலம் பயன்பெற்ற மாற்றுத்திறனாளியும், அவரை பராமரித்து வரும் அவரது தந்தையும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Next Story