தேர்தல் ஆணையத்தையும் அதற்கு மூளையாக செயல்படும் பாஜகவை கண்டித்தும் விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரத் தலைவர் நாகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்*

X
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது என கூறிய தேர்தல் ஆணையத்தையும் அதற்கு மூளையாக செயல்படும் பாஜகவை கண்டித்தும் விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரத் தலைவர் நாகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தர முடியாது , வாக்காளர்களின் விவரங்களை கேட்க யாருக்கும் உரிமை இல்லை நீக்கப்பட்டுள்ள வாக்களர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர் நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூற முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிராமணப் பத்திரம் தாக்கல் செய்ததையும் இதற்கு பின்னால் பாஜக அரசு இருக்கிறது என்றும், மேலம் இந்திய தேர்தல் ஆணையத்தையும், பாஜக அரசையும் கண்டித்து இன்று காலை டெல்லியில் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததை கண்டித்தும் இன்று விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரத் தலைவர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணசாமி முன்னிலையில் பாஜக மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும் அவர்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேடம் இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சுரேந்திரன்,மாவட்ட, நகர வட்டார நிர்வாகிகள் , நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், மஞ்சுளா, ரம்யா மற்றும் ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் முத்துக்குமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story

