சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் தலைமை அலுவலகங்கள், வீடுகள் மற்றும் லாரி செட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் நூற்றுக்கணக்கானோர் அதிரடி சோதனை! கட்டுக்கட்டாக ஆவணங்

சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் தலைமை அலுவலகங்கள், வீடுகள் மற்றும் லாரி செட் நிறுவனங்களிலும்  வருமான வரித்துறையினர் நூற்றுக்கணக்கானோர் அதிரடி சோதனை! கட்டுக்கட்டாக ஆவணங்
X
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் தலைமை அலுவலகங்கள், வீடுகள் மற்றும் லாரி செட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் நூற்றுக்கணக்கானோர் அதிரடி சோதனை! கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்!!
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் தலைமை அலுவலகங்கள், வீடுகள் மற்றும் லாரி செட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் நூற்றுக்கணக்கானோர் அதிரடி சோதனை! கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்!! சிவகாசியில் பிரபல பட்டாசு தொழிற்சாலைகளான சோனி, காளீஸ்வரி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள், பட்டாசு தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசியிலிருந்து வருடம் தோறும் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான பட்டாசுகள் லாரி செட் நிறுவனங்கள் மூலமாக நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனையாகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வரி எய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்தது. அதனடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை உயரதிகாரிகளும், அலுவலர்களும் சிவகாசியில் முகாமிட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கட்டுக் கட்டாக சிக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் வருமான வரி துறையினரின் இந்த சோதனை, இரவு முழுவதும் தொடரு மெனவும், இன்னமும் இரண்டு நாட்களுக்கு நடைபெறலாமென்றும் வருமான வரி துறை வட்டாரத்தினரிடையே கூறப்படுகிறது. கடந்த 6-ம் தேதி புதன்கிழமை சிவகாசிக்கு வந்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சிவகாசியிலுள்ள தொழில் முனைவோர்கள் யாருமே நேரில் சென்று சந்திக்காத நிலையில், அதனைத் தொடர்ந்து8-ம் தேதி வெள்ளிக்கிழமை சிவகாசிக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர்கள் நேரில் சந்தித்து தங்கள் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்க வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வருமான வரி துறையினரின் திடீர் சோதனை என்பது மத்திய அரசின் உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ? என்றதொரு அச்சம் தொழில் முனைவோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Next Story