ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவர்கள் போதைப்பழக்கதிற்கு எதிரான உறுதிமொழி

ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவர்கள் போதைப்பழக்கதிற்கு எதிரான உறுதிமொழி
X
ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவர்கள் போதைப்பழக்கதிற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
ஜெயங்கொண்டம் ஆக.12- ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை காலை சென்னையில் துணைமுதல்வர் தலைமையில் நடைபெற்ற பெருந்திரள் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி காணொளி காட்சி நிகழ்ச்சியை சுமார் 450 மாணவ-மாணவிகள் கவனித்தனர். அதன்பின்னர் காலை 11.00 மணிக்கு கல்லூரி முதல்வர்(மு.கூ.பொ) முனைவர் இராசமூர்த்தி தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அன்பரசன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 ஒருங்கிணைபாளர் முனைவர் பவானி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
Next Story