உதகை அருகே உள்ள கெரடா கிராமத்தில் இரவு நேரத்தில் உணவு தேடி வரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..............

X
உதகை அருகே உள்ள கெரடா கிராமத்தில் இரவு நேரத்தில் உணவு தேடி வரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.............. மக்களுக்கு அச்சுறுத்தலாக இரவு நேரத்தில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை ...................... நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அது சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வருவது வாடிக்கையாகவே உள்ளது. இவ்வாறு வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன. இந்நிலையில் உதகை அருகே உள்ள கெரடா கிராமத்தில் வீட்டின் வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று உணவு தேடி இரவு நேரத்தில் உலா வரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி திரியும் சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

