குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேக மூட்டம் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் எரியவிட்டு வாகனத்தை இயக்கி வருகின்றனர்

X
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேக மூட்டம் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் எரியவிட்டு வாகனத்தை இயக்கி வருகின்றனர் நீலகிரி மாவட்டத்தில் இன்று கடும்பனி மூட்டம் நிலவி வருகிறது. கடும் குளிர் நிலவுவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய லேம்ஸ்ராக் , டால்பின் நோஸ் ஆகிய பகுதிகளில் கடும் மேக மூட்டத்தால் இயற்கை காட்சிகளை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் லேம்ஸ்ராக் மற்றும் டால்பின்நோஸ் சாலையில் கடும் மேக மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள் . மேலும் பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் இயக்கினர் கடும் பனிமூட்டத்தால் வாகனஙகள் ஊர்ந்து சென்றது. குன்னூர் பகுதியில் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் எதிரில் செல்பவர்களின் முகம் தெரியாத அளவிற்கு மேக மூட்டம் கடுமையாக உள்ளதால் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு சாலைகள் தெரியவிலை பாதுகாப்பான இடத்தில் வாகனங்களை நிறுத்தி பத்திரமாக செல்லுமாறு காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Next Story

