நீலகிரியில் தொடர்மழையால் இயற்கை எழில் சூழ்ந்த, ஓவேலி பகுதிகளில் ஆறு நீர்வீழ்ச்சிகளில் வெள்ள பெருக்கு

X
நீலகிரியில் தொடர்மழையால் இயற்கை எழில் சூழ்ந்த, ஓவேலி பகுதிகளில் ஆறு நீர்வீழ்ச்சிகளில் வெள்ள பெருக்கு – சுற்றுலா பயணிகள் பரவசம், பாதுகாப்பு எச்சரிக்கை! நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் இயற்கை எழில் சூழ்ந்த, ஓவேலி பகுதிகளில் ஆறு நீர்வீழ்ச்சிகளில் வெள்ள பெருக்கு அனைத்தும் வெள்ளப் பெருக்குடன் ஓடுகின்றன. இதனால், இயற்கை அழகை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் பரவசத்தில் ஆற்றங்கரைகள், நீர்வீழ்ச்சி பகுதிகளில் காட்சிகளை கேமராவில் பதிவு செய்து மகிழ்கின்றர் சுற்றுலா பயணிகள் கேமரா கிளிக்கில் இயற்கை அழகு • கனமழையால் நீர்மட்டம் அதிகரித்து, நீரின் சத்தமும், இடிமுழக்கமும் அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் இதனை இயற்கையின் அரிய தருணம் எனக் கருதி புகைப்படம், வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். • பலர் இயற்கை எழில் சூழ்ந்த, ஓவேலி பகுதிகளில் ஆறு நீர்வீழ்ச்சிகளில் வெள்ள பெருக்கின் நீரின் ஓட்டத்தை ரசிக்க, குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றுலா அனுபவத்தை பகிர்ந்தனர். • நீர்வீழ்ச்சிகள் வெள்ளப் பெருக்கு காரணமாக மேலும் அழகிய தோற்றம் பெற்றுள்ளதுஅதிகாரிகள் எச்சரிக்கை • நீரின் வேகம் மற்றும் அளவு அதிகரித்துள்ளதால், வனத்துறை மற்றும் காவல்துறை பயணிகளை பாதுகாப்பு கோட்டிற்குள் நிறுத்தி, ஆற்றங்கரை மற்றும் நீர்வீழ்ச்சி அருகே செல்லாமல் இருக்க அறிவுறுத்தினர். • “மழை தொடரும் நிலையில், ஆற்றங்கரை, , நீர்வீழ்ச்சிகளில் நீராடுவது, புகைப்படம் எடுப்பது ஆகியவற்றை தவிர்க்கவும்” என அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரியின் மழைக்கால இயற்கை அழகு சுற்றுலா பயணிகளை ஈர்த்தாலும், பாதுகாப்பே முதன்மை என அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கின்றனர்.
Next Story

