தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றப்படுவதாக அமைச்சர் மதிவேந்தன் பேட்டி...

தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றப்படுவதாக அமைச்சர் மதிவேந்தன்  பேட்டி...
X
தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றப்படுவதாக அமைச்சர் மதிவேந்தன் பேட்டி...
தமிழகத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றப்படுவதாக அமைச்சர் மதிவேந்தன் ராசிபுரத்தில் பேட்டி... கூட்டத்தில் பெண் ஒருவர் தனது கோரிக்கையை வைக்க முன் வந்த போது அமைச்சரா!. முதல்வரா!. என்பது தெரியாமல் வணக்கம் வைத்து பின்னர் அவர் முதலமைச்சராக ஆக வேண்டும் என பேச்சி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குரங்கத்துபள்ளம், பிலிப்பாகுட்டை, வரகூர் கோம்பை, பெரப்பஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மக்கள் சந்தித்து குறைகளை கேட்டறியும் நிகழ்வானது நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆதிதிராவிட நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராம வாரியாக சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களாக பெற்று கூடிய விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுகையில் நாமக்கல் மாவட்டத்தில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் மக்களின் பகுதி வாரியாக சென்று ஆய்வு செய்தும் பொதுமக்களையும் கோரிக்கைகளை கேட்டறிவதாகவும், தற்போது நாமகிரிப்பேட்டை பகுதியிலும்,நாளை கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பழங்குடியின மக்களை சந்திக்க உள்ளோம். இந்த ஆய்வின்போது மேல்நிலை நீர் தேக்க தொட்டி,கழிவறை, சுற்றுச்சுவர் தடுப்பு சுவர்,அலைபேசி கோபுரங்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மனுக்களை பெற்றுள்ளதாகவும். தமிழ்நாடு அரசு தொல்குடி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வருடம் தோறும் 200 கோடி ரூபாய் மதிப்பில் பழங்குடியின மக்களுக்கு அனைத்து அடிப்படை தேவைகளிலும் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. உயர் முன்னுரிமை அளித்து பல்நோக்கு மையங்கள், சமுதாயக்கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் 2 நாட்கள் தங்கி இருந்து அங்குள்ள பழங்குடியின மக்களிடம் குறைகளைக்கேட்டு, அப்பகுதியில் முடிவற்ற பணிகள் ஆய்வு செய்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து முகாமானது நடத்தப்பட்டது. இதுபோன்ற முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் 138 பேர் மேல்நிலை கல்வி முடித்து,கடந்த சில வாரங்களுக்கு முன்பு NIT,IIM போன்ற தேசிய அளவிலான புகழ்பெற்ற அரசு நிறுவனங்களில் உயர் கல்வி பயில்வதற்கு சேர்க்கை பெற்றுள்ளனர். தமிழகத்தில் பழங்குடியின மக்கள் நன்கு கல்வி பெற்று தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருவதாகவும் மேலும் அவர்களை கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. ராமசாமி,கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்... முன்னதாக கூட்டத்தில் பெண் ஒருவர் தனது கோரிக்கையை வைக்க முன்வந்த நிலையில் அப்போது அமைச்சரா!., முதல்வரா!., என்பதை தெரியாமல் வணக்கம் வைத்த நிலையில் அப்போது மதிவேந்தன் அழைத்து தான் அமைச்சர் என கூறிய நிலையில் அப்பெண் மீண்டும் நீங்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை உருவானது. மேலும் அமைச்சர் மதிவந்தன் பேசுகையில் தான் கிராம வாரியாக மனுக்களை பெற வரும்போது யாரும் குறைகளை தெரிவிக்கவில்லை, ஆனால் நான் வேறு நிகழ்ச்சிகளுக்கு வரும்போது தனதுகாரை சூழ்ந்து கொண்டு குறைகளை கூறுகிறீர்கள், தற்போது அதிகாரியிகள் உள்ள போது குறைகளை சொல்வதில்லை என பேசினார்...
Next Story