தக்கோலத்தில் தகராறு ஈடுபட்ட சகோதரர்கள் கைது

X
தக்கோலம் காவல் நிலையத்திற்கு அவசர எண் 100-க்கு வந்த அழைப்பின் பேரில் போலீஸ்காரர் பிரேம் ஆனந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு வீட்டு அருகில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த சகோதரர்களான பார்த்திபன் மற்றும் பாலமுருகன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது திடிரென பார்த்திபன் வீட்டில் மறைத்து வைத்திருந்த மண்ணெனையை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றிக்கொண்டார். உடனே 2 பேரையும் தக்கோலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story

