கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் காருடன் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் காருடன் பறிமுதல்
X
நித்திரவிளை
குமரி மாவட்டம் நித்திரவிளை வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு காரில் அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் கேரளா கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நித்திரவிளை போலீசார் வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 26 கேன்களில் 1000லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் டிரைவர் ஜஸ்டின் ராஜ மற்றும் மண்ணெண்ணெய், கார் ஆகியவற்றை நாகர்கோவில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
Next Story