கரூர் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை.நீதிமன்றம் தீர்ப்பு.

கரூர் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை.நீதிமன்றம் தீர்ப்பு.
கரூர் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை.நீதிமன்றம் தீர்ப்பு. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பூங்கா நகரை சேர்ந்தவர் சிவசங்கரன் வயது 53. இவரது மனைவி சூரியகுமாரி வயது 34. இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி ஏற்பட்ட குடும்ப தகராறில் சிவசங்கரன் அவரது மனைவி சூரிய குமாரியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் இந்த கொலையை மறைக்க அவரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் சிவசங்கரன் அவரது மனைவியை கொன்றது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி மனைவியை கொன்ற சிவசங்கரனுக்கு ஆயுள் தண்டனையும் , தடயத்தை மறைத்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் , காவல் நிலையத்தில் பொய்யான புகார் கொடுத்ததற்கு 2- வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5,000- அபராதம் விதித்து இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி தங்கவேல் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்துகுற்றவாளி சிவசங்கரனை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story