குடற்புழு நீக்க மாத்திரை வழங்கள்

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கள்
X
வழங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு மாத்திரைகள் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடந்தது. அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை, கலெக்டர் பிரசாந்த துவக்கி வைத்து கூறியதாவது; தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லுாரிகள், அங்கன்வாடி நிலையங்கள் என மொத்தம் 2,528 நிலையங்களில் நடக்கிறது. இதில் விடுபடும் அனைத்து குழந்தைகளுக்கும் வரும் 18ம் தேதி மாத்திரை வழங்கப்படும்.மாத்திரையை காலை அல்லது மதிய உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டும். 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மி.கி அல்பெண்டாசோல் மாத்திரை, 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும், 22 முதல் 30 வயது பெண்களுக்கும் 400 மி.கி அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகை நோய் தடுக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. எனவே பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயமாக குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு உடல் ஆரோக்கியம் பெற்று பயனடைய வேண்டும் என கூறினார்.
Next Story