மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் கழிவு நீர் வெளியேறி நோய் தொற்று ஏற்படுத்தும் அவல நிலை!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் கழிவு நீர் வெளியேறி நோய் தொற்று ஏற்படுத்தும் அவல நிலை!
X
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் கழிவு நீர் வெளியேறி நோய் தொற்று ஏற்படுத்தும் அவல நிலை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பிரதான சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் கொப்பளித்து வெளியேறி துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருப்பத்தூர் சென்னை செல்லும் முக்கிய சாலையாக திகழ்ந்து வருகின்றது சாலையின் நடுவில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் கொப்பளித்து உபரி நீர் வெளியேறி சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கி வருவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளது அதுமட்டுமின்றி அந்த வழியாக நடந்து செல்லக்கூடிய பள்ளி மாணவ மாணவிகள் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர் இந்த பாதாள சாக்கடை கழிவுநீரிலேயே கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி மெத்தனப் போக்காக செயல்படுகின்றனர் என்று குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் மிக அருகிலேயே இந்த அவலம் என்றால் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்ள பொதுமக்களின் நிலை என்ன என்பதை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Next Story