வாணியம்பாடி அருகே மூன்று வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே மூன்று வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு
X
வாணியம்பாடி அருகே மூன்று வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கிய இருந்த நீரில் விளையாட சென்ற சிறுவன் தவறி விழுந்து மூழ்கி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்ள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் குணநாதன் - சங்கீதா இந்த தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த கோபி என்பவர் அப்பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது‌ அவ்வழியாக சைக்கிளில் சென்ற தர்ஷன் (வயது 3) சிறுவன் மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணியம்பாடி அருகே புதிதாக கட்டி வரும் வீட்டிற்க்காக தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்தில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story