கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் – ட்ரோன் கேமரா பறிமுதல் !

கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆர்ப்பாட்டம் – ட்ரோன் கேமரா பறிமுதல் !
X
கோவையில் மத்திய அரசை கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கோவையில் மத்திய அரசை கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து துவங்கி, அதை மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் எனவும், கேன்சர் நோய்களுக்கு சிகிச்சையளிக்க எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவிட வேண்டும் எனவும் கோரினர். ஆர்ப்பாட்டத்தின் போது அனுமதியின்றி பறக்கவிடப்பட்ட ட்ரோன் கேமரா காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story