பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் உடன் ஒப்பந்தம்!

பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் உடன் ஒப்பந்தம்!
X
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, வாழ்வியல் சாரா காப்பீட்டு சேவைகளை விரிவுபடுத்த பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன்  ஒப்பந்தம் செய்துள்ளனது. 
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, வாழ்வியல் சாரா காப்பீட்டு சேவைகளை விரிவுபடுத்த பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனது. 100 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த சேவையுடன், இந்தியாவின் மிகவும் நம்பகமான தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட், தனது வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான வாழ்வியல் சாரா காப்பீட்டு தயாரிப்புகளை வழங்குவதற்காக பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (BAGIC) நிறுவனத்துடன் மூலதன கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், மோட்டார் காப்பீடு, சுகாதார மற்றும் தனிப்பட்ட விபத்து காப்பீடு, கடன் வாடிக்கையாளர்களுக்கான சொத்து பாதுகாப்பு காப்பீடு, மற்றும் சைபர் காப்பீடு உள்ளிட்ட தயாரிப்புகள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பரந்த கிளை வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழியாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்திய காப்பீட்டு கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) விதிமுறைகளின் படி, கார்ப்பரேட் ஏஜெண்டாக பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, அதிகபட்சம் ஒன்பது நிறுவனங்களுடன் வாழ்வியல் சாரா காப்பீட்டு தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஒப்பந்தம் கொள்ள முடியும். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், சோழமண்டலம் எம்.எஸ். ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், மற்றும் சூரிச் கோடக் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றுடன் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களுக்கு கூடுதலாக, BAGIC இணைப்பு வங்கியின் வாழ்வியல் சாரா காப்பீட்டு தொகுப்பை மேலும் வலுப்படுத்துகிறது. கூட்டாண்மையைப் பற்றி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சலி எஸ். நாயர் தெரிவிக்கையில், "தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், எங்களின் நோக்கம் ஒரே இடத்தில் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதே. பஜாஜ் அலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைவது, எங்களின் வாடிக்கையாளர்களுக்கு வலுவான, தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்புத் திட்டங்களை வழங்கவும், கட்டண அடிப்படையிலான வருவாயை அதிகரிக்கும் எங்கள் திட்டத்திற்கும் உதவும்." BAGIC, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு ஒரு சிறப்பு சேவை குழுவையும், ஊழியர்களுக்கான இலவச பயிற்சியையும், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பையும், வலைத்தள இணைப்புகளையும் வழங்கி, பொறுப்பு மற்றும் சொத்து வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற காப்பீட்டு அனுபவத்தை உறுதிப்படுத்தும். இந்த கூட்டணி, டிசம்பர் 2022 முதல் பஜாஜ் அலியன்ஸ் லை/ப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (BALIC) உடன் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு இருந்து வரும் வெற்றிகரமான இணைப்பின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, நூற்றாண்டு கால பாரம்பரியத்தையும், நவீன நிதி தீர்வுகளையும் மீண்டும் ஒருங்கிணைக்கும் உறுதிப்படுத்துகிறது. வங்கியின் உறுதியை இந்த புதிய ஒப்பந்தம், பல்வேறு வாடிக்கையாளர்களுக்கான ஒரே இட நிதி தீர்வு வழங்குநராக, நம்பகத்தன்மையும், நவீன தொழில்நுட்ப சேவைகளையும் இணைக்கும் TMB-யின் அர்ப்பணிப்பை மேலும் வலியுறுத்துகிறது என்று தெரிவித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 587 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. வங்கியினைப் பற்றி www.tmb.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Next Story