வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம்

X
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 2-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினமும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டு வந்தனர். 10-ம் திருநாளான நேற்று காலை 6.30 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து தேருக்கு எழுந்தருளினார். தேரில் அவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்4 வெளிவீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர். காலை 7.15 மணிக்கு மீண்டும் தேர் நிலையை வந்து சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் நாகவேல், தலைமை கணக்கர் அம்பலவாணன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் பரமசிவம், கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

