கோவில் காெடை விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி: அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்

கோவில் காெடை விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி: அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கினார்
X
தூத்துக்குடியில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் காெடை விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பாிசு வழங்கினார்.
தூத்துக்குடியில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் காெடை விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பாிசு வழங்கினார். தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழா கடந்த 8ம் தேதி கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. 4ம் நாள் நிகழ்ச்சியாக பரதநாட்டியம் நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு பாிசுகளை வழங்கினார். விழாவில் தலைவர் லிங்கசெல்வன், செயலாளர் வேல்மணி முருகன், விழா பொருளாளர் வௌ்ளத்துரை, துணைத்தலைவர் பொன்ராஜ், துணைச் செயலாளர் ஜெயக்குமார், தணிக்கையாளர்கள் ஜெயபாண்டி, சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கமாாியப்பன், சண்முகசுந்தரம், முத்து மாாியப்பன், சூர்யகாந்த், சதீஷ்குமார், சுரேஷ், குமரன், சிவலிங்கம், மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொழிலதிபா் அன்பழகன், கவுன்சிலா் பேபி ஏஞ்சலின், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story