கரூர்- தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.

கரூர்- தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.
கரூர்- தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி. தமிழகத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் என்று தமிழக முதலமைச்சர் சென்னையில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்கு உட்பட்டவஞ்சியம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோருக்கு வீடு தேடி சென்று உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் கந்தராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வீடு தேடி உணவு பொருட்கள் வழங்கும் வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
Next Story