கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்

X
திண்டுக்கல், பழனியை அடுத்த கீரனூர் அருகே தும்மலபட்டியில் அருகே தேவி சேம்பர் செங்க சூலையில் தும்மலபட்டியை சேர்ந்த சரவணகுமார்(24) என்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் சிறுமி உள்ளிட்ட 3 பேரை கைது செய்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உரிய நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆதரவுடன் உறவினர்கள் 2 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டனர்.
Next Story

