ஆண்டிப்பட்டி கோட்டை- நள்ளிரவில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.

ஆண்டிப்பட்டி கோட்டை- நள்ளிரவில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.
ஆண்டிப்பட்டி கோட்டை- நள்ளிரவில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி , வேலஞ்செட்டியூரை சேர்ந்தவர் நீலமேகம் மகன் முனியப்பன் வயது 21. இவர் அருகில் உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் செயல்படும் ஒரு ஹோட்டல் கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி இரவு 11: 40 மணியளவில் தண்ணீருக்காக மோட்டாரை இயக்கி விட்டு, கடையின் மாடியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க்-ஐ பார்வையிட சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஹோட்டல் கடையின் பெயர் பலகையை மீது கை பட்டதால் திடீரென மின்சாரம் தாக்கி துடிதுடித்து மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த முனியப்பனின் சகோதரர் திருக்கண்ணன் வயது 23 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த முனியப்பனின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story