வாக்காளர் பட்டியலில் குழப்பத்தை ஏற்படுத்தி யார் லாபம் பார்த்தார்களோ அவர்களோடு துணையாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு

X
அரியலூர், ஆக.12- அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட நமங்குனம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட செயல்பாட்டினை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.ரத்தினசாமி தலைமை தாங்கினார். இந்த திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 51 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களில் 70 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை என 19,661 குடும்ப அட்டை தாரர்கள் பயனடைவார்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் மின்சார பேருந்துகள் சோதனை அடிப்படையில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது இது காலத்தின் அவசியம். காற்று மாசு ஏற்படுகின்ற சூழலை மாற்ற வேண்டும் என உலக அளவில் ஒரு இயக்கமே நடைபெறுகிறது டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட மாதங்களில் காற்று மாசு அதிகமாக இருக்கின்ற போது வாகன போக்குவரத்தை தடை செய்கின்ற சூழல் உள்ளது எனவே அந்த பிரச்சனை வராமல் பெரு நகரமாக இருக்கின்ற சென்னையில் முதல் கட்டமாக மின்சார பேருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளது படிப்படியாக காலப்போக்கங மற்ற இடங்களுக்கும் கொண்டு வரப்படும். மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் பல இடங்களில் தனியார் மூலம் ஏற்பட்டு வருகிறது அரசின் சார்பில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மகளிர் விடியல் பயண திட்டம் ஆந்திராவில் செயல்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு இலவச விடியல் பயணம் தொடங்கப்படும் என அறிவித்தபோது பலரும் இது சாத்திய மற்ற திட்டம் எனக் கூறினார்கள் அது தற்போது வெற்றிகரமான திட்டமாக முதலமைச்சர் நடத்தி காட்டி உள்ளார் ஒவ்வொரு நாளும் மிக அதிக அளவில் பெண்கள் கட்டணம் இல்ல இலவச பேருந்தை பயன்படுத்தி வருகிறார்கள் இதனை தொடர்ந்து தான் தெலுங்கானா கர்நாடகா மாநிலங்களில் விடியல் பயணச் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தற்பொழுது பக்கத்து மாநிலமான ஆந்திரா மாநிலத்திலும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது நமது மாநிலம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டு மாநிலமாகவும் நமது முதலமைச்சர் மற்ற மாநில முதலமைச்சருக்கு வழிகாட்டும் முதலமைச்சராகவும் உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது வாக்காளர் பட்டியலில் குழப்பத்தை ஏற்படுத்தி யார் லாபம் பார்த்தார்களோ அவர்களுக்கு துணையாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் ராகுல் காந்தி ஆதாரப்பூர்வமாக பல்வேறு தெளிவான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் இன்றைக்கு பொது ஊடகங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறி வருகிறது நடுநிலையாக இருப்பவர்கள் இது குறித்து கவலையும் தெரிவித்துள்ளார்கள் இது குறித்து உச்சநீதிமன்றமும் கேள்வி கேட்டபோது இவற்றையெல்லாம் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என சொல்லுகின்ற அளவிற்கு தேர்தல் ஆணையம் உள்ளது இது எந்த அளவிற்கு போகிறது என்றால் ஒன்றிய பாஜக அரசின் கைப்பிடியில் தேர்தல் ஆணையம் இருப்பதை தான் காட்டுகிறது எனவே அவர்களோடு இருக்கின்றவர்கள் என்ற காரணத்தினால் எடப்பாடி பழனிச்சாமி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை ஆனால் நஷ்டம் என்று வரும்போது அவர்களது கட்சிக்கும் வரும் என்பதை உணராமல் இருக்கிறார் கூறினார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் எம்.உமா மகேஸ்வரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா மற்றும் இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

