திருப்பத்தூரில் மர்மமான முறையில் பள்ளி மாணவன் உயிரிழந்ததை கண்டித்து

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காததால் அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட முயன்றபோது போலீசாரிடம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது திருப்பத்தூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் 11 ஆம் வகுப்பு மாணவன் முகிலன் உயிரிழப்பு பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது முகிலனின் உறவினர்கள் மற்றும் காவலர்களுக்கிடையேதள்ளுமுள்ளு ஏற்பட்டது காவலர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமப் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியான தோமினிக் சாவியோ பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி காணாமல் போனதால் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அவரது பெற்றோர்கள் புகார் அளித்து மறுநாள் அதே பகுதி பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்க பட்டணர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு கடந்த தேதி 5 ஆம் தேதி காவல்துறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியதின் உடலை வாங்கி அடக்கம் செய்தனர் இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தத்தை தொடர்ந்து காவலர்களுக்கும் முகிலனின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட சென்றபோது காவல்துறையினருக்கும் மற்றும் முகிலனின் உறவினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் காவலர்கள் முகிலனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்து குண்டு கட்டாக தூக்கிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

