உசிலம்பட்டியில் கடை அடைப்பு போராட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்கும் 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து சோதனை அடிப்படையில் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வரும் சூழலில், அணையில் உள்ள மதகு பகுதியை 67 அடியிலிருந்து 65 அடியாக குறைத்து நிரந்தரமாக தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வைகை அணை நிரம்பியுள்ள சூழலில் விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று (ஆக.12) காலை முதல் உசிலம்பட்டி வர்த்தக சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நகை கடை, ஜவுளி கடை என 2000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
Next Story



