தக்கலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

தக்கலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
X
இந்து முன்னணி
குமரி மாவட்டம் குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் வள்ளிசுனை உள்ளது. இதன் அருகே உள்ள கோவில் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், அதனை அரசு மீட்டு தர கேட்டு தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு இந்து முன்னணி சார்பில் கண்டன போராட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் மாயக்கூத்தன், ஆலோசகர் மிசா சோமன், எம் ஆர் காந்தி எம்எல்ஏ, உட்பட இந்து முன்னணி, பாரதிய ஜனதா நிர்வாகிகள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story