பட்டாசு வெடித்து இரண்டு மாணவர்கள் காயம்

பட்டாசு வெடித்து இரண்டு மாணவர்கள் காயம்
X
தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து இரண்டு மாணவர்கள் காயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரை சார்ந்த 17வயது மாணவன் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இன்று கல்லூரிக்கு வந்த அவர் அவருடைய நண்பரின் தகப்பனார் ஒருவர் தயாரிக்கும் பட்டாசு வெடியை கல்லூரிக்கு வாங்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அவரது நண்பர்கள் அவர் கொண்டு வந்த நாட்டு பட்டாசு வெடி திரியை இழுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் அந்த பட்டாசு வெடித்து சிதறியது இதில் தூத்துக்குடி பி என் டி காலனி 11வது தெருவை சார்ந்த 15 வயது மாணவன் கை முற்றிலும் சிதைந்தது, அவரது அருகில் நின்று இருந்தால் மற்றொரு மாணவனுக்கு கண்ணில் வெடித்து சிதறியதில் காயமடைந்து இரண்டு மாணவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாணம் காவல்துறையினர் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story