திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தாயுமானவர் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது

X
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கு சென்று ரேஷன் பொருட்களை. வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்இன்று காலை தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தைதுவக்கி வைத்தார் அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் பெரியகண்ணாலபட்டி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு வயது முதிந் தோர் இல்லத்திற்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கினார் மேலும் ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரிமுத்தூர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு வழங்கினர் மேலும் ஆம்பூர் வட்டம் மாதனூர் ஒன்றியம் மிட்டாலம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு ரேசன் பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

