இல்லம்தேடி ரேஷன் கலெக்டர் தொடங்கி வைத்தார்

இல்லம்தேடி ரேஷன் கலெக்டர் தொடங்கி வைத்தார்
X
பூதப்பாண்டி
தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயது முதியோருக்கும், மாற்று திறனாளிகளுக்கும் வசதியாக இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் அவரவர் வீட்டிற்க்கே சென்று வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் படி குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா பூதப்பாண்டியை அடுத்துள்ள திடல் ஊராட்சிக்குட்பட்ட ரெத்தினபுரம் ரேஷன் கடையிலிருந்து அந்த திட்டத்தை நேற்று துவக்கி வைத்து அந்த பகுதியில் உள்ள ஒரு முதியவர் வீட்டிற்க்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், குமரி மாவட்ட தி மு க (கி) துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, தோவாளை ஒன்றிய (வடக்கு) தி மு க செயலாளர் பிராங்கிளின் மற்றும் அதிகாரிகளும் கட்சி பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்கள்.
Next Story