பேரூராட்சி அலுவலகத்தில் மனு வழங்கிய பொதுமக்கள்

பேரூராட்சி அலுவலகத்தில் மனு வழங்கிய பொதுமக்கள்
X
குடியிருப்புகள் மத்தியில் அனுமதியின்றி செயல்படும் விசைத்தறி கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் புகார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆலாம்பாளையம் சரவணாநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரவணாநகர் குடியிருப்புகளுக்கு மத்தியில் மூன்று விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி கூடங்களில் இருந்து அதிகளவு இரைச்சல் ஏற்படுவதால் பள்ளி மாணவர்களும் முதியோர்களும் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். மேலும் பேரூராட்சி சார்பில் மனை பிரிவுகளில் வீடுகள் கட்ட மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கிடையாது என்ற வரைமுறையும் உள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நகலை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக செயல்பட்டு வரும் விசைத்தறி கூடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு வழங்கினர்.
Next Story