அரசு பள்ளி மாணாக்கர்களை புத்தக கண்காட்சிக்கு அழைத்து சென்ற விடியல் அமைப்பினர்

அரசு பள்ளி மாணாக்கர்களை புத்தக கண்காட்சிக்கு  அழைத்து சென்ற விடியல் அமைப்பினர்
X
குமாரபாளையம் அரசு பள்ளி மாணாக்கர்களை ஈரோடு புத்தக கண்காட்சிக்கு விடியல் அமைப்பினர் அழைத்து சென்றனர்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் உயர்நிலைப்பள்ளி, நாராயண நகர் நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி நடுநிலைப்பள்ளி, மற்றும் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளை ஈரோடு புத்தகத் கண்காட்சிக்கு விடியல் ஆரம்பம் சார்பில், தலைவர் விடியல் பிரகாஷ் தலைமையில் 150 மாணவர்களை அழைத்துச் சென்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சார்ந்த செந்தில் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்..மாணாக்கர்களுக்கு உண்டியல் மற்றும் புத்தகங்கள் வாங்கி கொடுத்து புத்தகக் கண்காட்சியின் சிறப்புகளை அமைப்பாளர் பிரகாஷ் எடுத்துரைத்தார். ஈரோடு புத்தகத் திருவிழாவின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று, புத்தகங்களை வாசிப்பு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளிகளின் தலைமை ஆசிரியைகள் சுகந்தி, கவுசல்யா, மலர்விழி, பாரதி, உதவி தலைமை ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வாகன வசதி ஏற்பாடு செய்து தந்த எஸ் எஸ் எம் லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ரவீந்திரனுக்கு மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தார்கள்.
Next Story