திருப்பரங்குன்றத்தில் மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கூலி திரைப்படம் வெற்றி பெற ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவிலில் இன்று (ஆக.12) ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு கோயிலை சுற்றி உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து நேத்திக்கடன் செய்தனர். தொடர்ந்து கூலி படத்தை வரவேற்கும் விதமாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு புளியோதரை பொங்கல் அன்னதானமாக வழங்கினர். செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் பாலதாம்ராஜ் கூறுகையில் கூலி திரைப்படம் அனைத்து தரப்பினரையும் எதிர்பார்த்த.வண்ணம் உள்ளது.எங்கள் வீட்டில் கூட பேரன், பேத்தி முதல் அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்றார் .
Next Story