சாரத்திலிருந்து தவறி கீழே விழுந்த கொத்தனார் பலி

சாரத்திலிருந்து தவறி  கீழே விழுந்த கொத்தனார்  பலி
X
மதுரை திருமங்கலம் அருகே சாரத்தில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலியானார்.
மதுரை மாவட்டம் திரு மங்கலம் எஸ் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (50) என்பவரின் மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். வேலுச்சாமி கொத்தனார்வேலை செய்து வரும் நிலையில் அச்சம்பட்டி பகுதியில் வீட்டில் நேற்று சீலிங் வேலை பார்க்கும் போது சாரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திரு மங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story