தாயும் மகனும் மரணம்.

மதுரை அவனியாபுரத்தில் மகன் இருந்த சோகத்தில் தாயும் மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை அவனியாபுரம் பகுதியில் புரசடி தெருவில் வசிக்கும் குமரவேல் (51) என்பவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இருவரும் சென்னையில் கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும் வழக்கம்போல் குமரவேல் வேலை எல்லாம் முடித்துவிட்டு நேற்று முன் தினம் (ஆக.10) இரவில் தனது மனைவி ராஜதிலகாவிடம் குடிக்க வெண்ணீர் கேட்டு உள்ளார். வெண்ணீர் கொண்டு வந்துள்ளார். அந்த நீரை பருகியபடியே மயங்கி உள்ளார். அக்கம் பக்கத்தினர் இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இந்நிலையில் நேற்று (ஆக.11) மகன் இருந்ததை அறிந்து குமரவேல் தாயார் கோவிந்தம்மாள் (80 ) என்பவர் அஞ்சலி செலுத்த வந்து மகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அங்கேயே கோவிந்தம்மாளும் இறந்துவிட்டார். இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story