கரூர்-அறிவித்தபடி சலுகை விலை பிரியாணி கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்.
கரூர்-அறிவித்தபடி சலுகை விலை பிரியாணி கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம். கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் பிரபல "திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி" கடையில் நிறுவனர் தினத்தை முன்னிட்டு 149 ரூபாய் என்ற சலுகை விலையில், இன்று நாள் முழுவதும், காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சலுகை விலை பிரியாணி கிடைக்கும் என்று விளம்பரம் வெளியிட்டு அறிவித்திருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக சலுகை விலை பிரியாணி குறித்து விளம்பரம் வெளியான நிலையில் காலை 6 மணி முதல் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது. ஆனால், பிற்பகல் 12:00 மணி முதல் சலுகை விலை பிரியாணி கிடைக்காமல் ரெகுலர் பிரியாணி மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் வாடிக்கையாளர்கள் பிற்பகல் 12 மணி முதல் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள், சலுகை விலையில் அறிவித்தபடி பிரியாணி வழங்கவில்லை என்று, கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த அங்கு வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் சலுகை அறிவிப்பு குறித்தும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், முன்கூட்டியே காவல் நிலையத்தில் அனுமதி கடிதம் பெறாமல் சலுகை அறிவித்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று ஊழியர்களை கடிந்து கொண்ட போலீசார் கடையை மூடச் சொல்லி உத்தரவிட்டனர். இதனால் கடை முன்பு வைக்கப்பட்டிருந்த சலுகை அறிவிப்பு பதாகைகளை கடையின் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மேலும் கடை மேலாளரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story





