முதலமைச்சரின் தாயுமானவன் திட்டத்தை துவக்கி வைத்த எம் எல் ஏ

முதலமைச்சரின் தாயுமானவன் திட்டத்தை துவக்கி வைத்த எம் எல் ஏ
X
முதலமைச்சரின் தாயுமானவன் திட்டத்தை துவக்கி வைத்த எம் எல் ஏ
செங்கல்பட்டு மாவட்டம்,பரனூரில் கூட்டுறவு துறை சார்பில் முதலமைச்சரின் தாயுமானவன் திட்டம் துவக்க நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இப்பகுதியில் 910 குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ள நிலையில்,இதில் 66 குடும்ப அட்டைத்தாரர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிந்தோர்கள் உள்ளனர். அவர்களின் இல்லத்திற்கே சென்று குடிமைப்பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தாயுமானவர் திட்டத்தை துவங்கி வைத்ததைத் தொடர்ந்து செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் இல்லந்தேடி சென்று பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். உடன் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், மத்திய ஒன்றிய செயலாளர் கே.பி.இராஜன், ஊராட்சி மன்ற தலைவர் டில்லி, அவைத்தலைவர் ஜீவானந்தம்,ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம், வார்டு உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story