ராசிபுரம் ஸ்ரீ இரட்டை விநாயகருக்கு வெற்றிலை அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..

X
Rasipuram King 24x7 |12 Aug 2025 8:27 PM ISTராசிபுரம் ஸ்ரீ இரட்டை விநாயகருக்கு வெற்றிலை அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பெரிய கடைவீதி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ இரட்டை விநாயகர் திருக்கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு ஸ்ரீ இரட்டை விநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக இரட்டை விநாயகருக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் 18000 வெற்றிலைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வெற்றிலை அலங்காரத்தில் ஸ்ரீ இரட்டை விநாயகரை வணங்குவதால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி சிறக்கும், தொழில் நன்கு வளர்ச்சி அடையும், திருமணத்தடை அகலும், காரியம் வெற்றி அடையும் என்பதால் பக்தர்கள் ஸ்ரீ இரட்டை விநாயகரை தரிசனம் செய்து சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story
