அரியலூர் அருகே சுப்பராயபுரம் கிராமத்தில் மயானத்திற்கு மயான பாதை வாட்ஸாப் வைரல்

அரியலூர் அருகே சுப்பராயபுரம் கிராமத்தில் மயானத்திற்கு மயான பாதை  வாட்ஸாப் வைரல்
X
அரியலூர் அருகே சுப்பராயபுரம் கிராமத்தில் மயானத்திற்கு மயான பாதை கேட்டு வாட்ஸாப் வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர், ஆக.12- அரியலூர் மாவட்டம்,வட்டம் சுப்புராயபுரம் ஊராட்சி பள்ளகிருஷ்னாபுரம் கிராமம் காலணி தெரு சுடுகாடு செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. இன்று 60 வயது முதிர்ந்த நீளம்பாள் அவர்களின் இறுதி அஞ்சலி இன்று 11/08/2025 நடைபெற்றது.இந்த சுடுகாடு செல்லும் பாதை மோசமான நிலையில் சேரும் சகதியும் சேற்று நிரில் அவர்களின் இறுதி அஞ்சலி நடைபெற்றது. 300 மீட்டர் மட்டுமே ஓரளவு இறுதி பயணம் வண்டி சென்றது.அதற்கு மேல் உறவினர்கள் தூக்கி சென்று சுடுகாடு வரை தூக்கி சென்று உடலை தகனம் செய்தனர்.அந்த பாதை நடக்க கூட முடியாத அளவுக்கு மோசமான நிலை இதில் இறந்தவரின் உடலை சுமந்து செல்வது எவ்வளவு கடினம்.இடையில் ஒரு ஓடை ஒன்று உள்ளது அதிலும் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணிர் செல்கிறது.இந்த இடத்தில் ஒரு பாலமாவது கட்டி கொடுங்கள் என்று கிராம சபையில் கேட்டும் எந்த பலனும் இல்லை. இறுதியாக இந்த மக்களுக்கு மயான கொட்டகை கிடைத்தது அதையும் கட்டுமான பணியை முடிக்காமல் எட்டு மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மழை காலங்களில் இங்கு யாராவது இறந்தால் அவர்களின் இறுதி பயணம் சொல்லி மாளது என்று மாறும் இந்த மக்களின் அவள நிலை ஏக்கங்களுடன் இந்த பகுதி மக்கள். ஊடங்களுக்கும் அரசுக்கும் தெரியபடுத்தும் முயற்சியில் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை அரியலூர் மாவட்டம்
Next Story