ராசிபுரத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கம் நகர மன்ற தலைவர் கவிதா சங்கர் கொடியசைத்து இல்லம் தேடி ரேஷன் பொருள் வழங்கல்..

X
Rasipuram King 24x7 |12 Aug 2025 9:12 PM ISTராசிபுரத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கம் நகர மன்ற தலைவர் கவிதா சங்கர் கொடியசைத்து இல்லம் தேடி ரேஷன் பொருள் வழங்கல்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று குடிமைப் பொருட்கள் ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர். முதற்கட்டமாக ராசிபுரம் மேட்டு தெரு, குமாரசாமி தெரு, ஜாகிர் உசேன் சாலை, சிபி கன்னையா தெரு, உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரேஷன் பொருட்கள் இல்லம் தேடி முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று வழங்கினர். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் கூட்டுறவு சார் பதிவாளர் மா.தேவகி, மேலாண்மை இயக்குனர் சி. இந்திரா, உதவி மேலாளர்கள் என். குணசேகரன், எஸ். ரத்தினவேல், கு. தமிழ்மணி, மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
