லத்தேரியில் போலீசை பார்த்ததும் ஓட்டம்!

X
வேலூர் மாவட்டம் லத்தேரியை அடுத்த தொண்டான்துளசி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த குப்பன் (60), டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக லத்தேரி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்த குப்பன் தப்பியோடிவிட்டார். அங்கிருந்த 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.தப்பியோடிய குப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story

