மலைமாவட்டத்தின் இயற்கை காப்பதில் பெரும் பங்கு வகிக்கும் வன பாதுகாவலனை காப்போம் இன்று உலக யானைகள் தினம்

மலைமாவட்டத்தின் இயற்கை காப்பதில் பெரும் பங்கு வகிக்கும் வன பாதுகாவலனை காப்போம் இன்று உலக யானைகள் தினம்
X
யானைகள் தினம் கொண்டாட்டம்
மலைமாவட்டத்தின் இயற்கை காப்பதில் பெரும் பங்கு வகிக்கும் வன பாதுகாவலனை காப்போம் இன்று உலக யானைகள் தினம் உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, நம் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன. உலகில் குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகவும், யானை தந்தங்களை சட்டவிரோதமாக வேட்டையாடுதல் மற்றும் வர்த்தகம் செய்வதை தடுக்கவும், காட்டு யானைகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவும், வளர்ப்பு யானைகள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. யானைகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 70 ஆண்டுகள் ஆகும். 7 அடி முதல் 12 அடிவரை உயரமும் 5 ஆயிரம் கிலோ வரை எடையும் கொண்டவையாகும். யானையின் தும்பிக்கையில் மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட அதிக சதை உள்ளது. இதன் மூலம் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மனிதனின் நடமாட்டத்தை கூட அறிய முடியும். யானைகள் 18-22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும். ஒரு குட்டி யானை பிறக்கும் போது 80 முதல் 120 கிலோ எடையுள்ளதாக இருக்கும். ஒரு குட்டி யானை பிறந்தாலும்அவை கூட்டமாக வந்து பார்க்கும் காடுகள் வளமாக இருப்பதற்கும் விதைப் பரவலுக்கும் யானைகள் முக்கிய காரணிகளாக உள்ளன. யானைகள் இலை, செடி, கொடி, மூங்கில், கரும்புகளை விரும்பி உண்ணும். நாளொன்றுக்கு 200 முதல் 250 கிலோ இலை, தழைகளை சாப்பிடும். 150 முதல் 200 லிட்டர் வரை தண்ணீரையும் உட்கொள்கிறது. யானைகள் அழிந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் மொத்த விலங்கினம், மனிதர்கள் வாழவே முடியாது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், யானைகளை பாதுகாக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான முக்கிய நோக்கம் ஆகும். யானைகள் இனிமையானவைகள் இவர்கள் புத்திசாலிகள், மேலும் அவை உலகெங்கிலும் உள்ள மக்களால் நேசிக்கப்படுகின்றன. ஆம், இவை மிகப்பெரிய நில விலங்குகள் "யானைகள்". துரதிர்ஷ்டவசமாக, இந்த கம்பீரமான உயிரினங்கள் தங்கள் உயிர்வாழ்வதற்கு பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. யானை பாலூட்டி வகையைச் சேர்ந்தது. இது தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது. யானை 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. மனிதர்களை தவிர்த்து, விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழக்கூடியது. இந்தியாவில் யானைப் பாதுகாப்பு ஒரு முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான பிரச்சினை. ஆனால் நாம் நெருக்கமாகப் பார்க்கும்போது, ​​சுருங்கும் யானைகளின் வாழ்விடங்கள், தென்னிந்தியாவில் உள்ள பிரமிகிரி-நீலிகிரி கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதி, இந்தியாவின் தெற்கு, வடமேற்கு, வடகிழக்கு, மத்திய மற்றும் மத்திய-கிழக்கு பகுதிகளில் பரவியுள்ள 5 மெட்டா மக்கள்தொகைகளில் முக்கியமான யானைத் தொடர்களில் ஒன்றாகும். கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைகள் தொடங்கி பெங்களூரு நகருக்கு வெளியே உள்ள பன்னர்கட்டா மலைகள் வரை பாதுகாக்கப்பட்ட பகுதி காடுகளின் மிகப்பெரிய இணைப்பை வழங்குவதன் மூலம் தென்னிந்தியா இந்த அழிந்து வரும் விலங்குக்கு நாட்டின் சிறந்த வாழ்விடத்தை வழங்குகிறது. வனப்பகுதியில் உள்ள செடிகொடிகளின் இலை, தழைகளை உணவாக உட்கொள்ளும் யானைகள் வனப்பகுதியில் இடும் சாணத்தில் அதிக அளவு விதைகள் இருப்பதால் வனமெங்கிலும் இயற்கையாகவே விதைகளை தூவி மரங்கள் வளர்வதாக தெரிவிக்கின்றனர். இதனால் யானைகள் தான் வனத்தை புதுப்பித்து வருகின்றன. அல்லது உருவாக்குகின்றன. தமிழகத்தில் யானைகள் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை இரண்டும் இணையும் பகுதியான சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மாயார் வேலியில் அதிக அளவில் நடமாடுகின்றன. யானைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் அனைத்தும் இங்கு கிடைப்பதால் யானைகளின் முக்கிய வலசை பாதையாக இது அமைந்துள்ளது. தற்போது யானைகளின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வனம் வளமாகி மழை வளம் பெருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. யானைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே காடுகளின் பரப்பளவு அதிகரிக்கும். ஒரு காட்டு யானை தன்னுடைய எச்சத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு 31 ஆயிரம் விதைகளை தூவுகிறது. இதனால் அதிக அளவில் மரம், செடி, கொடிகள் முளைத்து வனம் பசுஞ்சோலையாக மாறுகிறது. ஒரு யானை நாள் முழுவதிலும் எடுத்துக் கொள்ளும் பலவிதமான பழங்கள் மற்றும் தாவரங்களின் இலைகளை மட்டுமே சாப்பிடுகிறது. யானையின் கழிவுப்பொருட்கள் பாரம்பரிய சிகிச்சை முறைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மருத்துவ குணங்கள் கொண்ட சாணம் நோய் நீக்கும் அருமருந்தாகவும் விளங்குகிறது. யானைப் வறட்டிகளை பற்றவைத்து அவற்றை சுவாசித்தால் அது சைனஸ் போன்ற நோய்களில் இருந்தும் நம்மை காக்கிறது. யானையின் வரட்டி ஒரு சிறந்த கொசு விரட்டியாக செயல் படுகிறது. வறட்டி ஆக்கப் பட்ட யானை சாணியை, அது நன்கு காய்ந்ததும் ஒரு சிறு துண்டை எடுத்துக் அதை நெருப்பால் பற்ற வைத்து சிறிது நேரம் விட்டு வைத்தால் போதும். கொசுக்கள் இருக்கும் இடம் தெரியாமல் பறந்து போய் விடும். மேலும் ஒரு சிறப்பம்சம், இதை பற்ற வைத்து எரியும் போது இதில் இருந்து எந்த ஒரு நாற்றமும் வராது. இதனால் இவை மற்ற செயற்கை கொசு விரட்டிகள் போல நமது நாசிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை. இன்றைய நிலையில் காடுகளின் காவலனாக இருக்கும் யானைகள் பல விதமான அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றன. முக்கியமாக, யானைகளின வழித்தடங்கள் துரித கதியில் அழிக்கப்படுகின்றன. காடுகளுக்கு இணைப்புப் பாலமாக உள்ள இந்த வலசைப்பாதைகள் அழிக்கப்படுவதன் காரணமாக யானைகள் குறுகிய காடுகளுக்குள் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. வலசைப் பாதைகளைத் துண்டிப்பதே, யானைகள், ஊருக்குள் படையெடுக்க முக்கியக்காரணமாக விளங்குகிறது தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன. யானைகளை பாதுகாத்தால் வனவளம் பெருகும். வனவளம் பெருகினால் மழை வளம் பெருகும் என்பது குறித்து வனத்துறையினரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இன்று உலக யானைகள் தினத்தன்று யானைகளை காப்பது குறித்த உறுதிமொழியை ஏற்போம்.
Next Story