கூடலூர் நந்தட்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புலிக்குட்டி உயிரிழப்பு

X
கூடலூர் நந்தட்டி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புலிக்குட்டி உயிரிழப்பு – வன ஆர்வலர்கள் அதிர்ச்சி! நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள நந்தட்டி பகுதியில் நேற்று இரவு 9 மணிககு நடந்த சோகமான சம்பவம், வனவிலங்கு பாதுகாப்பில் அக்கறை கொண்ட அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் எப்படி நடந்தது? •இரவு 9மணியளவில், நந்தட்டி மலைச் சாலையில் சாலையை கடக்க முயன்ற ஒரு புலிக்குட்டி அடையாளம் தெரியாத வேகமான சென்ற வாகனத்தால் மோதப்பட்டது. • மோதி விட்டு, வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல். • கடுமையான காயத்தால் புளிக்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.வனப்பகுதி சாலைகளின் அபாயம் • நந்தட்டி பகுதி வனப்பகுதியை ஒட்டி செல்லும் சாலை என்பதால், யானைகள், மான், காட்டு பன்றி, புலிகள் போன்றவை அடிக்கடி சாலையை கடக்கின்றன. • மழைக்காலத்தில், உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் சாலைகளில் அதிகம் தோன்றும்.வனத்துறை எச்சரிக்கை • “வனப்பகுதி வழியாக செல்லும் போது, இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் வேகத்தை குறைத்து, எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்ட வேண்டும்” என வனத்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். • சம்பந்தப்பட்ட வாகனத்தை அடையாளம் காணும் முயற்சியில் வனத்துறையும் காவல்துறையும் இணைந்து செயல்படுகின்றன.
Next Story

