உதகையை அடுத்த அண்ணா காலனி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை..
உதகையை அடுத்த அண்ணா காலனி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை.... நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட அண்ணா காலனி, ரிச்சிங் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் இங்குள்ள தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி தோட்டங்கள் மற்றும் சாலைகளில் கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஓணம் விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து உலா வருவதாகவும், வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணியான நாய்களை வேட்டையாடி செல்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித் திரியும் சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



