கோத்தகிரியில் போலீஸ் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பி கரடியை விரட்டிய காவல்துறையினர்...

வைரல் வீடியோ
கோத்தகிரியில் போலீஸ் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பி கரடியை விரட்டிய காவல்துறையினர்... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளிலிருந்து குடியிருப்பு பகுதிகளிலும், சாலையோரங்களிலும் கரடிகள் உலா வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள பன்னீர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் கரடி ஒன்று உலா வந்தது. இதனை அவ்வழியாக சென்ற ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் தங்களது வாகனங்களில் உள்ள சைரன் ஒலி எழுப்பி கரடியை விரட்டினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
Next Story