பணிப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி  வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

பணிப்பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி  வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் 
X
ஆர்ப்பாட்டம்
வருவாய்த் துறையில் பணியாற்றும் ஊழியர்களை பாதுகாத்திட பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய் துறை பணிகளை செம்மையாக செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். வருவாய் துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்தின் உச்சவரம்பை 25 விழுக்காடாக உயர்த்த வேண்டும். அனைத்து நிலை பணிகளிலும் வெளி முகமை, தற்காலிகம், தொகுப்பூதிய நியமனங்களை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை 1 மணிநேரம் முன்பாக அலுவலகப் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டத் தலைவர் ஜெயதுரை தலைமை வகித்தார்.  கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சீனிவாசன், தேர்தல் துணை வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கவிதா மற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக சங்க நிர்வாகி அசரப் நன்றி கூறினார்.
Next Story