சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம்

சுதந்திர தினத்தன்று  கிராம சபைக் கூட்டம்
X
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2025 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தன்று (15.08.2025) முற்பகல் 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து 306 கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story