மூன்று நாட்களுக்கு கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி

X
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக ஒட்டன்சத்திரம் கிருஸ்டியன் பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் 12.08.2025 முதல் 14.08.2025 வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் உற்பத்திப் பொருளான பேன்சி, கைவினைப் பொருட்கள், சின்னாளபட்டி சேலைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மென்பொம்மைகள், கவரிங் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைத்திடும் வண்ணம் உரிய அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டிற்கு இரண்டாம் கட்டமாக ஒட்டன்சத்திரம் கிருஸ்டியன் பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் 12.08.2025 முதல் 14.08.2025 வரை விற்பனை கண்காட்சி மூன்று தினங்கள் நடைபெறவுள்ளதால், இக்கண்காட்சியில் கலந்து கொள்ள ஏதுவாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யப்பட உள்ளதால், அதிகளவில் கல்லூரி மாணவ / மாணவிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடையுமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story

