கோவில்பட்டியில் தேசிய நூலகர் தின விழா

X
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூலகத்துறை சார்பில் தேசிய நூலகர் தின விழா நடந்தது. நாடு முழுவதும் ஆகஸ்ட்-12ம் தேதி இந்திய நூலக தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர். அரங்கநாதனின் பிறந்தநாளை தேசிய நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் கல்லூரி மாணவர்கள் இந்திய நூலகதந்தை எஸ்.ஆர் அரங்கநாதனின் திருவுருவத்தை ரங்கோலி கோலமாக வரைந்து அகல் விளக்கேற்றி மரியாதை செய்தனர். பின்னர் எஸ்.ஆர்.அரங்கநாதனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து கல்லூரி பாடப் புத்தகத்தோடு பொதுநூலக புத்தகத்தையும் வாசித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திட விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,நூலக வளர்ச்சிக்கு உதவி செய்திடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பல்வேறு கலை இலக்கிய போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். கோவில்பட்டி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன், நூலகர் செண்பகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் கண்ணன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் விஜய கோபாலன், செல்வலட்சுமி, கற்குவேல், ஆனந்த குமர், சிவா. ரமேஷ், சரவணகுமாரி, செல்வம் உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி மாணவி லாவண்யா வரவேற்றார். முடிவில் கல்லூரி மாணவி காயத்ரி நன்றி கூறினார்.
Next Story

