சேலம் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் வளர்ச்சி பணிகளை

X
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 51-வது வார்டு மணியனூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நவீன ஆடு இறைச்சி கூடம், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சுகாதார வளாகம், நகர்ப்புற நலவாழ்வு மையம், சாலை சீரமைக்கும் பணி போன்ற வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதை ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் தண்ணீரின் வேகத்தின் அளவை கருவி மூலம் கண்காணிக்கப்படுவதை ஆய்வு செய்தார். மேலும் வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளருக்கு ஆணையாளர் இளங்கோவன் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாநகர நல அலுவலர் முரளிசங்கர், உதவி ஆணையாளர் வேடியப்பன், செயற்பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story

